குடிமக்கள் பிரகடனம் குழுவினர் சீர்திருத்தங்களை கோரும், பிரதமர் நஜிப் ரசாக்கை பதவியிலிருந்து அகற்றுவது உட்பட, தங்களுடைய மனுவை மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்திடம் தாக்கல் செய்யவிருக்கின்றனர்.
குடிமக்கள் பிரகடனத்தின் பிரதிநிதியை சந்திக்க இணங்கும் எந்த ஒரு மலாய் ஆட்சியாளரையும் சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மூத்த செய்தியாளர் காடிர் ஜாசின் குடிமக்கள் பிரகடனத்தின் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் கூறினார்.
இக்கூட்டம் முன்னாள் பிரதமர் மகாதிரின் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மகாதிர் பேரரசரை சந்தித்தது பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது.
ஒரு மில்லியனுக்கும் கூடுதலான மலேசியர்கள் கையொப்பமிட்டுள்ள குடிமக்களின் பிரகடனத்தை மகாதிர் அலோர் சீத்தாரிலுள்ள இஸ்தானா அனாக் புக்கிட்டில் அகோங்கிடம் அளித்தார்.