கெடா மந்திரி புசார் அஹ்மட் பாஷா முகம்மட் ஹனிபா உடல்நலமற்றிருப்பதாகக் கூறப்படுவதை கெடா அம்னோ மறுத்தது.
அஹ்மட் பாஷா உடல்நலம் குன்றியிருக்கிறார் என்பது வெறும் வதந்தி. தீய நோக்கத்துடன் அப்படி ஒரு வதந்தி பரப்பப்பட்டு வருவதாக கெடா அம்னோ இளைஞர் தலைவர் சைபுல் ஹஸிஸி சைனோல் அபிடின் கூறினார்.
“உண்மையில் அஹ்மட் பாஷா திடமாகவும் துடிப்பாகவும் இருந்து மாநில மேம்பாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகிறார்”, என்றவர் கூறியதாக அஸ்ட்ரோ அவானி நேற்று அறிவித்தது.