800,000 ரிங்கிட் எம்ஏசிசி விசாரிப்பதற்கு பெரிய விஷயம்!!!

“எதிர்க்கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சுமத்தப்படும் சில ஆயிரம் ரிங்கிட் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றி மட்டுமே  எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கவலைப்படும். அவற்றை ஆய்வு செய்ய அது முழுமூச்சாக உடனடியாக நடவடிக்கையில் இறங்கும்.”

அமைச்சர் குடும்பத்துக்கு விடுமுறை சுற்றுலாவுக்கு என்எப்சி 800,000 ரிங்கிட்டை செலவு செய்தது

பெண்டர்: உண்மையில் இது வருத்தத்தைத் தரும் செய்தியாகும். இந்த நாட்டில் மிக முக்கியமான அமைச்சுக்களில் ஒன்றுக்கு அந்த அமைச்சர் தலைமை தாங்குகிறார். அது பேறு குறைந்த மக்களைக் கவனிக்க வேண்டும். சமூக நலன் என்ற புனிதமான காரியங்களுக்காக அது அரசாங்க நிதிகளைப் பயன்படுத்த வேண்டும்.

என்றாலும் பொது நிதிகள் அப்பட்டமாக முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதை நாம் இன்று பார்க்கிறோம். அதுவும் அவரது அமைச்சுக்கும் அந்தத் திட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த விவகாரம் அமைச்சருக்குப் பாதகமான தோற்றத்தைத் தந்துள்ளது.

ஒருவர் உன்னிப்பாக கவனித்தால் இந்த நாட்டில் சமூக நல முறைகளைக் கூட அந்த அமைச்சு நன்கு கவனிக்கவில்லை என்பது தெரிய வரும். ஆகவே அந்த அமைச்சர் அந்த அமைச்சுக்குக் கூடப் பொறுப்பேற்க பொருத்தமற்றவர்.

எல்லோருக்கும் நியாயம்: அந்த விடுமுறைச் சுற்றுலாவில் சென்ற கூட்டரசு அமைச்சரது குடும்பம், செலவு செய்யப்பட்ட பணத்தை அரசாங்கக் கருவூலத்துக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அமைச்சருடைய மற்ற நிறுவனத்துக்கு விளம்பரத்துக்காக கொடுக்கப்பட்ட பணமும் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்.

அமைச்சர்கள் பொது நிதிகளை தவறாகப் பயன்படுத்துவதைப் பார்க்கும் போது ஆத்திரமாக வருகிறது. அந்தத் திட்டம் ஏன் அமைச்சருக்குக் கொடுக்கப்பட்டது? உயிர்வாழ்வதற்குப் போராடும் மக்களுக்கு அது வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

விசுவாசமான மலேசியன்: அதில் சம்பந்தப்பட்ட மக்களுக்கு வெட்கமே இல்லை. ஏனெனில் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்திலிருந்து மக்களுடைய பணத்தை எடுத்து வெளிநாட்டு சுற்றுலாவை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். அது உண்மையில் வெட்கக்கேடானது. தார்மீகத்துக்கு முரணானது.

டிபாலா: நீங்கள் அரசாங்கத் திட்டத்தை எடுத்துக் கொண்டு அதற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை உறிஞ்சி விட்டு அதனை பாதி வழியிலேயே கைவிட்டு விடலாம். பணமே கொடுக்காமல் சீன நிறுவனங்களில் பங்குகளை பெறுவதற்கு நீங்கள் கோட்டா முறைகளை நம்பியிருக்கலாம். உங்களுக்கு மூளை இல்லாவிட்டாலும் நீங்கள் நிறுவனம் ஒன்றின் தலைவராகலாம். கழிவு விலையில் தரமான பொருட்களை பெறுவதற்கு நீங்கள் உதவித் தொகைகளை கோரலாம். நீங்கள் அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்து வெளிநாடுகளுக்கு உங்கள் குடும்பத்தைக் கொண்டு செல்லலாம். அது குறித்து யாரும் கேள்வி எழுப்பினால் சீன அசம்பிளி மண்டபத்தை எரிக்கப் போவதாக நீங்கள் மருட்டலாம்.

அடையாளம் இல்லாதவன் ஏ: சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் தமது காரைப் பராமரிப்பது குறித்தும் ஒரு நிகழ்வின் போது சில மாடுகள் வெட்டப்பட்டதும் மீதும் அவரிடம் கேள்விகள் தொடுக்கப்பட்டன. 2,400 ரிங்கிட்டுக்கும் மேற்போகாத ஒரு தொகைக்காக தியோ பெங் ஹாக் மரணமடைந்தார்.

ஆனால் ஆயிரக்கணக்கான ரிங்கிட்டைச் செலவு செய்யும் அம்னோ அமைச்சர்கள் தப்பித்து விடுகின்றனர்.  காரணம் அவர்கள் பற்றி எம்ஏசிசி ஏதும் செய்யாமல் இருப்பதே அதற்குக் காரணம்.

கேகன்: 800,000 ரிங்கிட் எம்ஏசிசி விசாரிப்பதற்கு பெரிய விஷயம் !!! எதிர்க்கட்சி சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சுமத்தப்படும் சில ஆயிரம் ரிங்கிட் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றி மட்டுமே  எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கவலைப்படும்.  அவற்றை ஆய்வு செய்ய அது முழுமூச்சாக உடனடியாக நடவடிக்கையில் இறங்கும்.

உண்மையான குற்றவாளி: எம்ஏசிசி பற்றி நிறையச் சொல்லப்பட்டுள்ளது. அவை அனைத்தும் அதற்கு எதிரானவை. அந்த அமைப்பு முழுமையானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட அதன் ஊழியர்கள் ஊழல் பேர்வழிகளைப் பிடிக்கக் கடுமையாகப் பாடுபடுகின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக  எம்ஏசிசி-க்கு வழக்குத் தொடரும் அதிகாரமில்லை. அது விசாரணை செய்ய பல மாதங்களை செலவிட்டிருக்கலாம். ஆனால் சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் அதன் புலனாய்வுப் பத்திரங்களை கழிக்க வேண்டிய காகிதங்களாகவே கருதுகின்றது.

ஆகவே பொது மக்கள் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தையே குறை கூற வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட எம்ஏசிசி ஊழியர்களுக்கு என் அனுதாபங்கள். அவர்கள் அன்றாடம் குறை கூறல்களைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

TAGS: