மலேசியாகினி அலுவலகத்தில் 50க்கு மேற்பட்ட சிவப்புச் சட்டையினர்

mkஅம்னோ   சுங்கை   புசார்   தொகுதித்   தலைவர்   ஜமால்   முகம்மட்  யூனுஸ்   தலைமையில்    சுமார்  50  சிவப்புச்   சட்டையினர்   இன்று   மலேசியாகினி   அலுவலகத்துக்கு    வந்தனர்.

பெரும்பாலும்  இளைஞர்களைக்   கொண்ட   அக்கூட்டம்  ‘மேரா,  மேரா (சிவப்பு,  சிவப்பு)’   என்றும்  ‘ஹஞ்சோர்  சோரோஸ் (சோரோஸ்  ஒழிக)’  என்றும்  முழக்கமிட்டது.

ஜமாலும்   அவருடன்  சில    சிவப்புச்   சட்டைப்   பிரதிநிதிகளும்   மலேசியாகினி   அலுவலகத்துக்குள்   அழைத்துச்   செல்லப்பட்டனர்.

அவர்களை   மலேசியாகினி  தலைமை    செய்தியாசிரியர்   ஸ்டீபன்  கான்,  செய்தியாசிரியர்கள்   ஆர்.கே.  ஆனந்த்,   ஜிமாடி   ஷா   ஒத்மான்   ஆகியோர்   சந்தித்தனர்.

அவர்களிடம்  “செய்தியாளர்  கூட்டம்”   நடத்துவதற்காக   மலேசியாகினி  வந்ததாக  ஜமால்   கூறினார்.

டஜனுக்கு  மேற்பட்ட   போலீசாரும்   அங்கிருந்தனர்.