மலேசியாகினி அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸிடமிருந்து மான்யம் பெற்றதாகக் கசிந்துள்ளதாக தகவலை விசாரிக்க போலீஸ் சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
கூட்டரசு குற்றப்புலனாய்வுத் துறை துணை இயக்குனர் ஒருவரின் தலைமையில் அக்குழு செயல்படும் என இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்காரை மேற்கோள்காட்டி உத்துசான் மலேசியா ஆன்லைன் தெரிவித்தது.
ஐவர் அடங்கிய அக்குழு தகவல்களைச் சேகரித்து அவ்விவகாரம் தொடர்பில் விரிவாக புலனாய்வு செய்யும் என காலிட் கூறினார்.
ஆனால், எந்தச் சட்டத்தின்கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
இது குறித்து அறிந்துகொள்ள மலேசியாகினி காலிட்டைத் தொடர்பு கொண்டு பதிலுக்காகக் காத்திருக்கிறது.
சபாஷ் ! ஐஜிபி! உங்களிடம் கடமை உணர்வு பீறிட்டு அடிக்கிறது. ஜார்ஜ் சோரோஸிடமிருந்து மலேசியாகினி பெற்ற நிதி உண்மைதானா என்பதை கண்டறிய உங்களது போலீஸ் படை திரண்டுவிட்டது. அதேபோன்று மத்திய கிழக்கில் உள்ள ஒருவர், எங்கள் நாட்டில் உள்ள ஒருவரின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் {$$$} புகுத்திவிட்டார். எங்கே, புறப்படுங்கள் பார்ப்போம்? ஆஹா! படுக்கையை விட்டு எழுந்துவிட்டீர். பாயை சுருட்டி விட்டீர். பல்லை துலக்கிவிட்டீர். புறப்பட்டுவிட்டது புயல் ……….டொன்… டோ…டொய்ங்….
உண்மைக்கும் நீதிக்கும் நியாயத்திற்கும் இது காலமில்லை. பொய்யும் பித்தலாட்டமும் தான் இன்றைய நிலை– ஆட்சியிலும் அதிகாரத்திலும் என்றென்றும் இருக்க எல்லாமே.
Open Society Foundation எல்லா நாடுகளிலும் உள்ள NGOs மட்ட்ரும் ONLINE NEWS PORTAL ளுக்கு பணம் உதவி செய்கிறது …. எங்க எல்லாத்தையும் புடிங்க பாப்போம் ? எங்கே எல்லா அமெரிக்கர்கள் நிறுவனங்களை வெளியேற்றுங்கள் பாப்போம் ? SOROS அவர்களின் பணம் எல்லா நிறுவனங்களிலும் உள்ளது… இப்ப இன்னாடா செய்வீங்க ?