சனிக்கிழமை சிவப்புச் சட்டையினர் மலேசியாகினி அலுவலகத்துக்குமுன் ஆர்ப்பாட்டம் செய்வார்களானால் அங்கு என்ன நடக்கிறது என்பதை போலீசார் பார்க்கத்தான் போகிறார்கள் என இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ்(ஐஜிபி) காலிட் அபு பக்கார் கூறினார்.
“சனிக்கிழமை பார்ப்போம்”, என்று புக்கிட் அமானில் செய்தியாளர் கூட்டத்தில் காலிட் தெரிவித்தார்.
சனிக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள சிவப்புச் சட்டைப் பேரணியின்போது மலேசியாகினி அலுவலகத்தின் ஒரு பகுதியை “உடைத்தெறியப் போவதாக” சிவப்புச் சட்டைத் தலைவர் ஜமால் முகம்மட் யூனுசுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை எடுக்குமா என்று வினவியதற்கு ஐஜிபி அவ்வாறு பதிலளித்தார்.
ஓபன் சொசைடி அறநிறுவனத்திடமிருந்து மான்யம் பெற்றதாகக் கூறப்படுவது குறித்து ஒரு விளக்கம் தராவிட்டால் அவ்வாறு செய்யப்போவதாக ஜமால் மிரட்டியிருந்தார்.
“ஜமால் நிறையத்தான் பேசுகிறார். ஆனால், எதுவும் செய்வதில்லை”, என காலிட் கூறினார்.
குறைக்கிற நாய் கடிக்காது.உண்மைதான்.ஆனால் அதனால் அச்சுறுத்தல் நிலவுகிறதே.அதறகாகவாவது நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
ஐஜிபி – சீருடையில் ஒளிந்திருக்கும் ஜமால் ! ஜமால் சாதாரண உடையில் பவனிவரும் ஐஜிபி ! 1MDB-பணம் இவ்விருவரின் மூளையையும் கொழுப்பாக மாற்றிவிட்டது . எய்தவன் இருக்க அம்பை நோவதேன் ? எய்தவன் ஒழிந்தால் , எல்லாம் தானே அடங்கிவிடும் .
இதை விட்டால் நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது ஐஜிபி. என்கவுண்டரில் போட்டு தள்ளி ஆண்மகன் என்பதை நிரூபியுங்கள்.
இந்த உலகம் மிக பெரிய பெரிய சாம்ராஜ்யங்களை கண்டுள்ளது. அவை அனைத்தும் ஒருநாள் விழுந்தும் போயின. எனவே, நிலையான அரசியல் என்று எதுவுமே இல்லை. உங்கள் அரசியல் காலம் முடியும் பொழுது, உங்கள் சந்ததியினரை இந்த உலகில் எவருடனும் சேர்க்க முடியாமல் போகும். அன்று நான் பார்க்க வேண்டும் இந்த UMNO அரசியல் வாதிகளின் முகங்களை ….அப்ப நான் ஒரு ஆடடம் போடுவேன் பாருங்க … பிரபு தேவாவே பயன்திருவாரு …. காரணம் இந்த ‘காலம்’ இன்னமும் கடவுளின் கட்டுப்பாடில் இருக்கு என்று ….