ஒஎஸ்எப்-உடன் எந்தத் தொடர்புமில்லை என்கிறது பினாங்கு கழகம்

penangபினாங்கு    கழகம் ,    அமெரிக்க   தொழிலதிபர்   ஜார்ஜ்  சோரோஸ்    ஆதரவில்   செயல்படும்   ஓபன்  சொசைடி    அறநிறுவன(ஓஎஸ்எப்)த்திடமிருந்து   நிதியுதவி   பெற்றதாகக்  கூறும்   ஊடகச்  செய்திகளை   மறுத்தது.

“டிசி   லீக்ஸ்   என்ற   இணையத்தில்   வெளியிடப்பட்டிருந்த   ஒரு  ஆவணத்தை  அடிப்படையாக  வைத்து   இக்குற்றச்சாட்டு     சுமத்தப்படுகிறது.

“பினாங்கு  கழகம்,   ஓபன்  சொசைடி   அறநிறுவனத்திடம்    நிதியுதவி   கேட்டதுமில்லை,  பெற்றதுமில்லை  என்பதை    உறுதியாக   தெரிவித்துக்கொள்ள  விரும்புகிறது.  அதே  வேளையில்   அதன்   பணியாளர்கள்  எவரும்   அந்த   ஆவணத்தில்   குறிப்பிடப்பட்டிருப்பதுபோல்   செண்ட்ரல்  ஈரோபியன்  பல்கலைக்கழகத்தில்    பயில   பண  உதவி  பெற்றதில்லை.

“அதாவது   பினாங்கு   கழகத்துக்கும்   அந்த  அமைப்புகளுக்கும்   எந்தத்   தொடர்புமில்லை”,  என    அதன்  செயல்முறை  இயக்குனர்   சைரில்   கீர்  ஜோகாரி  ஓர்    அறிக்கையில்   கூறினார்.