பெர்சே 5 வாகன அணி மலாக்காவில் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் அதன் மீது முட்டைகளும் வீசப்பட்டன.
அந்த வாகன அணி மெர்லிமாவ், அலோர்காஜா மற்றும் தம்பின் போன்ற இடங்களைச் சுற்றிவர இருந்தது.
பிற்பகல் நேரத்தில், 40 லிருந்து 50 வாகனங்கள் அடங்கிய பெர்சே அணி உள்ளூர் அம்னோ உறுப்பினர்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் பெர்சேயின் கொடிகள் போன்றவற்றை வாகனங்களிலிருந்து அகற்ற முயன்றனர் என்று பெர்சே குழு உறுப்பினர் பரிடா நாட்வா பிக்ரி கூறினார்.
ஆனால் கைகலப்புகள் ஏதும் இல்லை, வெறும் கூச்சல் மற்றும் அச்சுறுத்தல் போன்றவை இருந்தன என்று பரிடா மலேசியாகினியிடம் கூறினார்.
வாகன அணியின் அடுத்த இலக்கான தம்பினுக்கு செல்ல அது கட்டாயப்படுத்தப்பட்டது என்று கூறிய பரிடா, தம்பினில் பிரச்சனை ஏதும் இல்லை என்றும், பெர்சே தீபம் நெகிரி செம்பிலான் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது என்றாரவர்.
முட்டாள்களின் ஆயுதம்
அம்னோ காவாலிகளுக்கு இதெல்லாம் காய் வந்த கலை- உருப்படியாக ஒன்றும் முடியாது– மிரட்டி உருட்டி சாதிப்பதில் பெரிய கில்லாடிகள்– நாதாரிகள்– வேறு என்ன சொல்ல –தலையே அப்படி .