மலேசியாகினி அதன் செய்தியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கிறது, அதன் முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநபர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்று அச்செய்தி தளத்தின் முதன்மை ஆசிரியர் ஸ்டீபன் கான் கூறுகிறார்.
“வெளிநபர்கள் அல்லது மலேசியாகினியின் பங்குதாரர்கள்கூட எங்களுடைய தலையங்கத்தில் அவர்களுடைய செல்வாக்கைக் காட்டுவது என்பது முற்றிலும் சாத்தியமற்றதாகும்”, என்று இன்று சிகப்புச் சட்டையினர் அச்செய்தி தளத்தின் பெட்டாலிங் ஜெயா அலுவலகத்திற்கு அருகில் நடத்திய ஆர்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் ஸ்டீபன் கூறினார்.
மலேசியாகினியில் 29 விழுக்காடு பங்குகளைக் கொண்டிருக்கும் எம்டிஐஎப்பிற்கு கூட அத்தளத்தின் தலையங்கம் பற்றிய கொள்கையில் தலையிடும் அதிகாரம் இல்லை என்றாரவர்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாகினியும் எம்டிஐஎப்பும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அந்த முதலீட்டாளருக்கு மலேசியாகினின் தலையங்கம் குறித்த கொள்கையில் தலையிடும் அதிகாரம் இல்லை என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்று ஸ்டீபன் விளக்கம் அளித்தார்.
மலேசியாகினின் தலையங்கம் சுயேட்டையானதல்ல. அது அமெரிக்க வணிகர் ஜியோர்ஜ் சோரோஸின் ஆணைக்குட்பட்டது என்று சிகப்புச் சட்டையினரின் தலைவர் ஜமால் யுனூஸின் கூற்றுக்கு எதிர்வினையாற்றிய ஸ்டீபன் இவ்வாறு கூறினார்.
சில ஐரோப்பிய வங்கிகளையும் உள்ளடக்கிய எம்டிஐஎப்பின் 50 முதலீட்டாளர்களில் ஒன்றுதான் சோரோஸின் ஒஎஸ்எப். சரவாக்கில் இரண்டு கினிடிவி செய்தி திட்டங்களுக்கு ஒஎஸ்எப்பிடமிருந்து நிதி பெறப்பட்டது.
மலேசியாகினியின் தலையங்கம் பற்றிய கொள்கையைப் பொறுத்தவரையில் அதன் உண்மையான கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டவர்கள் அதன் செய்தியாளர்களே.
“நாங்கள் நாள்தோறும் சந்திக்கிறோம். எந்த செய்தியை வெளியிடுவது மற்றும் தொடர்வது என்பதை மலேசியாகினியின் செய்தியாளர்களும் ஆசிரியர்களும் தீர்மானிக்கின்றனர்”, என்று ஸ்டீபன் மேலும் விளக்கினார்.
மலேசியாகினியின் பங்குதாரர்கள்
மலேசியாகினியின் பங்குதாரர்கள் பற்றி விளக்கம் அளித்த ஸ்டீபன், தானும் மலேசியாகினியின் தலைமைச் செயல்முறை அதிகாரி பரமேஸ் சந்திரனும் பெரும்பான்மையான பங்குகளை, மொத்தம் 59 விழுக்காடு, வைத்திருப்பதாக கூறினார்.
எம்டிஐஎப்பிடம் இருக்கும் 29 விழுக்காடு பங்குகள் போக, எஞ்சியிருக்கும் 12 விழுக்காடு பங்குகளை மலேசியாகினியின் பணியாளர்கள் வைத்திருக்கின்றனர்.
மலேசியாகினியில் பங்குகள் வைத்திருப்பவர்களில் ஒரே ஒருவர் மட்டும் அரசியல்வாதி என்று ஸ்டீபன் தெரிவித்தார்.
பிகேஆரை சேர்ந்த சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா ராசையா 17 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் மனித உரிமைகள் வழக்குரைஞராக இருந்த போது ரிம5,000 ஐ முதலீடு செய்திருந்தார்.
“அது அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானிப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அவரது பங்கு 0.001 விழுக்காடாகும். இது உண்மையிலேயே சிறியதாகும்”, என்று ஸ்டீபன் கூறினார்.
சிகப்புச் சட்டையினரின் ஆர்ப்பாட்டம்
இன்று பின்னேரத்தில் சுமார் 700 சிகப்புச் சட்டையினர் மலேசியாகினிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய கூடினர். அது கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் நீடித்தது.
மலேசியாகினி, பெர்சே மற்றும் மெர்தேக்கா சென்டர் ஆகிய மூன்றும் சோராஸின் ஒஎஸ்எப்பிடமிருந்து நிதி உதவி பெற்றுள்ளன என்று கசியவிடப்பட்ட ஓர் ஆவணத்தின் அடிப்படையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் பேரணியை முதலில் டாத்தாரான் மெர்தேக்காவில் நடத்துவதற்கு ஜமால் திட்டமிட்டிருந்தார். கோலாலம்பூர் மாநகர் மன்றம் சிகப்புச் சட்டையினர் மற்றும் பெர்சே ஆகிய இரண்டுக்கும் டாத்தாரான் மெர்தேக்காவில் பேரணி நடத்த அனுமதி மறுத்துவிட்டதால், ஜமால் அவரது பேரணியை மலேசியாகினியின் அலுவலகத்திற்கு அருகில் நடத்தினார்.
திரு ஸ்டீபன் கான், தங்களிடம் கேள்வி கேட்பது, கேள்வியை கேட்டது அறிந்துக்கொள்வது அரசாங்கமோ அல்லது காவல் துறையாக இருக்கவேண்டியதே தவிர , அறிவு சிந்தனை இனவெறி மூர்க்கத்தனம் கொண்ட ஜமால் போன்ற அறிவிலிகளுக்கு அல்ல .
அதே சமயம் காவல் துறையின் மெத்தனப்போக்கு நாட்டில் வன்முறையை தூண்டிவிடுவதாக அமைகிறது. ஆரம்பம் முதலே பல வழிகளில் வன்முறைக்கு வழிவிடும் இந்த ஜமால் என்ற பேர்வழியை காவல்துறை அடக்காமல் இருக்கும் நோக்கம் என்ன என்பதை யாராலும் புரிந்துக்கொள்ள முடியவில்லை.
முதலில் காவல் துறை தலைவரை களையெடுக்க ஆவணசெய்யவேண்டும், அதன் பின்னர் நாட்டில் சுபிக்ஷம் பிறக்கும் என்பது அனைவரின் எண்ணமாகும். எண்ணம் ஈடுபெற இறைவனை வணங்குவோம்.
இந்த அம்னோ காவாலிகள் இந்த நாட்டின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் பெரும் மிரட்டல்– ஆனால் என்ன இந்த காவாலிகளை தூண்டி விடுவது யார் என்று தெரியாதா என்ன.? அவனின் அப்பனே 1974 தேர்தலின் பொது இன்னொரு மே 13 வேண்டுமா என்று கேட்டவன் தானே-பிறகு அவனின் மகனிடம் என்ன எதிர்பார்க்க முடியும்>