பெர்சே 5 பேரணிக்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்கையில் அதன் தலைவர் மரியா சின் அப்துல்லா இன்னொரு கொலை மிரட்டலைப் பெற்றுள்ளார்.
இம்முறை அவருடைய கைத்தொலைபேசிக்கு அனுப்பப்பட்டுள்ள உருவப் படிவங்களில் மரியா, அவரது மூன்று மகன்கள், மன்டீப் சிங் மற்றும் அம்பிகா சீனிவாசன் ஆகியோரின் தலைகள் கொய்யப்பட்டுள்ளன.
முதல் மிரட்டல் கடந்த மாதம் அனுப்பப்பட்டிருந்தது.
இன்று பின்னேரத்தில், மரியா ஈப்போவில் இந்த மிரட்டல் குறித்து போலீஸ் புகார் செய்தார். அவருக்கு அனுப்பப்பட்டுள்ள உருவப் படிவங்களை காட்ட அவர் மறுத்து விட்டார். அவை அவ்வளவு கொடூராமை என்றாரவர்.
“நான் அவற்றை எனது மகன்களுக்கும் காட்டவில்லை”, என்று மரியா மலேசியாகினியிடம் கூறினார்.
பெர்சே 5 பேரணி திட்டமிட்டப்படி நடைபெறும். “ஒன்றுகூடுவதற்கான நமது உரிமை பெடரல் அரசமைப்புச் சட்டம், பிரிவு 10 இல் அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக நாம் தொடர்ந்து போராடுவோம்”, என்று இன்று பின்னேரத்தில் மரியா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
நவம்பர் 19 இல் பெர்சே 5 பேரணி நடைபெறும். புதிய மலேசியாவுக்காக போராடும் தங்களோடு இணைந்து போராட வருமாறு அனைத்து மலேசியர்களுக்கும் மரியா அழைப்பு விடுத்தார்.
ayyo! ennammaa ippadi pandraangalema!
இதைப்பற்றி தலை ஒன்றுமே கூறவில்லையே! என்ன ஐயா நம்பிக்கை நாயகனே உச்சி குளிர்ந்து இருக்குமே.
நம் நாட்டில் போலீ்ஸ் படை இருக்கும்போது என்ன கவலை.அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்,கவலையை விடம்மா.
பொதுவாழ்க்கை என்றால் இப்படிப்பட்ட மிரட்டல்கள் வருவது சகஜம்தான். குரைக்கிற நாய் கடிக்காது. அதுவும் நமது நாட்டு நாய்களை பற்றி நாம் அறியாயதா ? கவலை வேண்டாம்.
பொதுவாழ்க்கை என்றால் இப்படிப்பட்ட மிரட்டல்கள் வருவது சகஜம்தான். குரைக்கிற நாய் கடிக்காது. அதுவும் நமது நாட்டு நாய்களை பற்றி நாம் அறியாததா ? கவலை வேண்டாம்.