பிஎன்னை வீழ்த்துவதில் பாஸுக்கு அக்கறையில்லை: ஹராபானுக்கு என்ஜிஓ அறிவுறுத்து

ngoஎதிரணிக்  கூட்டணி   பாஸ்  கட்சியைத்   தன்பக்கம்  இழுப்பதற்கான   முயற்சிகளக்   கைவிடுவது     நல்லது.  பாஸ்   கட்சிக்கு   அரசாங்கத்தை   மாற்றும்  ஒரு   கூட்டு   முயற்சியில்    சேர்ந்து  கொள்ளும்    எண்ணம்  இல்லை.

“பாஸின்     செயல்கள்   ஹராபானின்    அழைப்பை   ஏற்பதில்   அக்கட்சிக்கு    அக்கறை   இல்லை    என்பதைத்   தெளிவாகக்   காண்பிக்கின்றன.  அது   என்னன்னவோ  காரணங்களைக்  கூறுகிறது,  நிபந்தனைகளைப்  போடுகிறது”,  என   புரோ-பக்கத்தான்    என்ஜிஓ   ஓர்   மகஜரில்    கூறியது.

அது,   அந்த  மகஜரை   நேற்று,  ஹராபான்   மாநாட்டில்    ஹராபான்   பங்காளிக்   கட்சிகளிடமும்   பார்டி  பிரிபூமி   பெர்சத்து    மலேசியா(பெர்சத்து)விடமும்   பார்டி   வாரிசான்   சாபாவிடமும்   கொடுத்தது.