கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் பிகேஆர் உதவித் தலைவர் முகம்மட் ரபிசி ரம்லி 1972ஆம் ஆண்டு அதிகாரத்துவ இரகசிய சட்ட (ஓஎஸ்ஏ)த்தை மீறினார் என்று தீர்ப்பளித்து அவருக்கு 18 மாதச் சிறைத் தண்டனை விதித்தது.
ரபிசி அனுமதியின்றி 1எம்டிபி மீதான அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கையின் 98அம் பக்கத்தைத் கைவசம் வைத்திருந்தார் என்று அவருக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அது ஓஎஸ்ஏ பிரிவு 8(1) (சி) (iii)-இன்படி குற்றமாகும்.
அவர் மார்ச் 28-இல், நாடாளுமன்ற வளாகத்தில் அந்த இரகசிய ஆவணத்தின் விவரங்களை அனுமதியின்றி வெளிப்படுத்தினார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. அது ஓஎஸ்ஏ பிரிவு 8(1) (இ) (iv)-இன்படி குற்றமாகும். குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் இவ்விரண்டு குற்றச்சாட்டுகளில் ஒவ்வொன்றுக்கும் ஈராண்டுச் சிறைத் தண்டனை விதிப்பதற்கு சட்டம் இடமளிக்கிறது.
ரபிசிக்கு இரண்டு குற்றங்களுக்கும் 18மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் உத்தரவிடப்பட்டது.
பிற்காலத்தில் மலேசிய வரலாறு உம்மைப் போற்றும். நீர் வாழ்க.
amma2
அட பாவிகளா… நாட்டில் நடக்கும் ஊழல்களை வெளியே சொன்னால் குற்றவாளிகள் என்று சிறையில் தள்ளுவதுதான் இந்நாட்டின் நீதியா..?
இந்த தீர்ப்பினால் ரபிசி ஓய்ந்து விட போவதில்லை .
தூக்கி உள்ள போடுங்க சார் … அப்பத்தான் அரசியல் பண்ணாம, உண்மைக்கு உழைப்பார்கள் எதிர்க்கட்சிகள் …. அன்வரை உள்ளே தூக்கி போடதனாலதான் 1MDB விவகாரம் வெளியில் வந்துச்சு …..
நேர்மையான சட்டமும் , அதன் அமைப்பும், நேர்மை வழிகொண்ட காவல் துறை இருந்தாலொழிய நாடு உருப்படும் . மதத்தை முன்வைத்து நாட்டை வழிவகுக்கும் அறிவிலிகளுக்கு நேர்மையின் நோக்கம் விளங்காது. இந்த நிலை இருக்குமாயின் நாடு பின் தள்ளப்படுவதோடு , மக்களும் பல வழிகளில் அல்லல்பட நேரிடும் .
நேர்மையான சட்டமும் , அதன் அமைப்பும், நேர்மை வழிகொண்ட காவல் துறை இருந்தாலொழிய நாடு உருப்படும் . மதத்தை முன்வைத்து நாட்டை வழிவகுக்கும் அறிவிலிகளுக்கு நேர்மையின் நோக்கம் விளங்காது. இந்த நிலை இருக்குமாயின் நாடு பின் தள்ளப்படுவதோடு , மக்களும் பல வழிகளில் அல்லல்பட நேரிடும் .
மலேஷியா வில் பேசவே முடியாதா, என்ன தான் நடுக்குது, ஜனநாயக ஆட்சியா இல்லை சர்வாதிகார ஆட்சியா. இதற்க்கு முடிவு இல்லையா .அங்கு உள்ள மக்கள் உண்மியல் பாவம்
நீதி தேவன்கள் யாரின் அடிமை என்று இப்போது அப்பட்டமாக புரிந்து இருக்க வேண்டுமே! அரைவேக்காடு நீதி தேவன்கள்– மக்களின் பணத்தில் படித்து விட்டு மக்களுக்கு மக்களுக்கு துரோகம் செய்யும் ஈனங்கள்