பாஸ் எல்லா விசயங்களிலும் அம்னோவை ஆதரிக்கவில்லை என்று அந்த இஸ்லாமிய கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறினார்.
“சில விசயங்களில் அம்னோவை ஆதரிக்கிறோம். ஆனால், அதனுடன் ஒத்துப்போகாத இடங்களும் உண்டு. ஒட்டுமொத்தமாக (அம்னோவை) ஆதரிக்கவில்லை”, என்றாரவர்.
பாஸ் அம்னோவை ஆதரிக்கிறதா என்ற கேள்விக்கு மாராங் எம்பி அவ்வாறு பதிலிறுத்தார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் ஏதாவது வெகுமதி பெற்றோரோ அவரை ஆதரிக்கிறார்கள் என்று கூறியிருப்பது தொடர்பில் ஹாடியிடம் அக்கேள்வி கேட்கப்பட்டது.
உடும்பு நாக்கு!
பாஸ் சில விசயங்களில் அம்னோவை ஆதரிக்காமல் பல விசயங்களில் அம்னோவை ஆதரித்து இன்று அரசியல் அனாதையாகி விட்டது.
ஆமாம் நீங்கள் கொண்டு வந்த ஊடூட் திட்ட்த்தை ஆதரிக்க வில்லையென அம்னோவை பிடிக்க வில்லையென சொல்லு …
UMNO வை நம்பிய எவன் உருப்பட்டான் ? முதலில் அன்வர். பிறகு வேதமூர்த்தி, முயிடின் யாசின், பழனிவேல், முக்ரிஸ், ஷாபி அப்டால்….. இப்படி அடிக்கி கொண்டே போகலாம் …. இருந்தும் அவர்களையே நம்பி அடிவாங்கறீங்களே ….. இதனாலதான் உங்களை பார்த்து மற்றவர்கள் சிரிக்கிறார்கள் …….