முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் பிகேஆர் எம்பியைப் போல் சிறை செல்லும் நிலை தமக்கு வராது என்று நம்புகிறார்.
“ரபிசிக்கு நேர்ந்தது குறித்து வருந்துகிறேன். அந்நிலை எனக்கு வராது என்றும் நம்புகிறேன்”, என இன்று புக்கிட் அமானில் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் முகைதின் கூறினார்.
“ஏனென்றால் நான் பேசியது நாடாளுமன்றத்தில். அங்கு பேசும் உரிமை எனக்கு உண்டு. எனக்கு அதற்கான சட்டவிலக்கு உண்டு”, என்றாரவர்.
ரபிசியைப் போல் சிறைக்குச் செல்ல நேரும் என்று அஞ்சுகிறாரா என்று வினவப்பட்டதற்கு முகைதின் அவ்வாறு பதிலளித்தார்.