அரசுத்தொடர்பு நிறுவன(ஜிஎல்சி)த்தின் இயக்குனர் ஒருவரும் அவரின் இளவலும் 39.9 மில்லியன் ஊழல் தொடர்பான விசாரணைக்கு உதவியாக ஏழு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டனர்.
50வயது இயக்குனர் ஒரு ‘டத்தோ’வுமாவார். அவர் நேற்று மாலை மணி 5 அளவில் ஷா ஆலமில் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்தால் கைது செய்யப்பட்டார்.
அவர் இன்னொரு ஜிஎல்சிக்குத் தலைமை செயல் இயக்குனராக இருந்து அதிலிருந்து கடந்த ஆண்டு விலகிக்கொள்வதற்குமுன் அவருக்குத் தொடர்புள்ள ஒரு நிறுவனத்துக்கு குத்தகைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அந்த ஜிஎல்சியில் ஓர் இயக்குனராக இருந்த அவரின் இளவலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். கூடவே அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தடுத்து வைக்கப்பட்டார்.