பினாங்கில் சொத்துகளுக்கு 6 விழுக்காடு மதிப்பீட்டு வரி விலக்கு

gstபினாங்கில்  சொத்துரிமையாளர்கள்  நிம்மதி   பெருமூச்சு   விடுவார்கள்.

சொத்துகளுக்கான   மதிப்பீட்டு   வரியில்   6  விழுக்காடு   விலக்களிக்கப்படுவதாக   மாநில   அரசு   அறிவித்துள்ளது.

இதனை   அறிவித்த   முதலமைச்சர்     லிம்   குவான்     எங்,  கூட்டரசு   அரசாங்கம்   2015  ஏப்ரலில்   அமல்படுத்திய       பொருள்,  சேவை   வரி(ஜிஎஸ்டி)யால்   மக்களுக்கு   ஏற்பட்டுள்ள  பொருளாதாரச்  சுமையைக்  குறைக்க    இந்த  வரி  விலக்கு   ஓரளவு   உதவும்    என்றார்.