அம்பாங் பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் ஆடம் ரோஸ்லி எதிராக அவரது சொத்துகள் பற்றி எம்எசிசி மற்றும் வருமான வரி இலாகாவில் அம்னோவைச் சேர்ந்தவர்கள் புகார் செய்கிறார்கள்.
அம்பாங் அம்னோ தொகுதி தலைவர் இஸ்மாயில் கிஜோ மற்றும் சிகப்புச் சட்டைகள் தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் ஆகியோர் இதனைத் தெரிவித்தனர். இதற்கு முன்னதாக செய்தியாளர்களை ஹெலிகோப்டரில் ஏற்றிக்கொண்டு ரோஸ்லியின் பங்களாவையும் சொகுசுக் கார்களையும் காட்டினர்.
இதன் பிறகு, புத்ராஜெயாவுக்குச் சென்று புகார் செய்து ஆடமுக்கு சொத்துகள் எப்படி வந்தது என்று விசாரிக்கும்படி எம்எசிசியையும் வருமான வரி இலாகாவையும் கேட்டுக்கொள்வோம் என்று அவ்விருவரும் கூறினர்.