பெர்சே டி-சட்டையில் விமான நிலையம் வந்திறங்கினார் மகாதிர்

drmசூடான்   நாடு   சென்றிருந்த   டாக்டர்   மகாதிர்   முகம்மட்   இன்று   பிற்பகல்   மணி   ஒன்றுக்கு   மலேசியா  திரும்பினார்.

மகாதிர்   பெர்சே  டி-சட்டை   அணிந்து   விமானத்திலிருந்து   இறங்கும்   படமொன்றை    வலைப்பதிவாளர்   பிர்டுஸ்  அப்துல்லா    பகிர்ந்து   கொண்டிருக்கிறார்.

ஆனால்,  மகாதிர்   வந்திறங்கியது   சுபாங்   விமான  நிலையமா,   கோலாலும்பூர்   அனைத்துலக   விமான   நிலையமா    என்பது    தெளிவாகத்   தெரியவில்லை.

அந்த  91-வயது   முன்னாள்  பிரதமர்    பார்டி   பிரிபூமி   பெர்சத்து   மலேசியா   தலைவர்களுடன்   இன்று  பிற்பகல்  பெர்சே   பேரணியில்   கலந்து  கொள்வார்    என   எதிர்பார்க்கப்படுகிறது