கேஎல்சிசி நோக்கி 20ஆயிரம் மஞ்சள் சட்டையினர்

bersihaaaகோலாலும்பூரில்  ஜாலான்  அம்பாங்    அருகில்  உள்ள   பெட்ரோனாஸ்   இரட்டைக்  கோபுரம் ,  கேஎல்சிசியைச்  சுற்றியுள்ள   பகுதி    மஞ்சள்   நிறமாக  மாறி   வருகிறது.

பெர்சேயின்   உத்தரவுக்கிணங்க   அதன்   ஆதரவாளர்கள்   கேஎல்சிசியை   நோக்கிக்  கூட்டம்   கூட்டமாக    சென்று  கொண்டிருக்கிறார்கள்.

பிற்பகல்   மணி   3.30   அளவில்   சுமார்  20ஆயிரம்   பேர்   அங்குக்  கூடியிருந்தனர்.  பலர்  எல்ஆர்டி-இல்    வந்தனர்.

மூவாயிரம்  பேரடங்கிய     சிறு   கூட்டம்    ஒன்று   மஸ்ஜித்  ஜாமெக்கிலிருந்து   கேஎல்சிசி-க்கு    நடந்து   சென்று  கொண்டிருக்கிறது.

மேலும்  ஈராயிரம்   ஆதரவாளர்கள்   ஜாலான்   துன்   பேராக்கில்  உலாத்திக்   கொண்டிருக்கிறார்கள்.  ஆக,  25 ஆயிரம்   பெர்சே   ஆதரவாளர்கள்   கூடியுள்ளனர்.

சிவப்புச்  சட்டையினர்  பெரும்பாலும்  கலைந்து   சென்று  விட்டனர்