கெராக்கான் இளைஞர் தலைவர் ஒருவர், சமயத்தை அரசியலுடன் கலக்காதீர் என்று பெர்சே 5 பேரணியில் கலந்துகொள்ளுமாறு ஊக்குவித்த தேவாலயங்களுக்கு நினைவுறுத்தினார்.
கடந்த வாரம் சில தேவாலயங்கள் பேரணி நடப்பதற்கு முன்னதாக வழிபாட்டுக் கூட்டங்களை நடத்தி குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கே ஆதரவு தெரிவித்ததாக கெராக்கான் இளைஞர் துணைத் தலைவர் எண்டி யோங் தெரிவித்தார்.
“தேவாலய வழிபாடுகளில் கலந்து கொண்டோரில் பலர் குறிப்பிட்ட வண்ணச் சட்டைகளை அணிந்திருந்தனர்.
“பேரணியில் கலந்து கொண்ட பேராயர் ஒருவர் தம்மைப் பின்பற்றுவோரையும் அவ்வாறே செய்யுமாறு ஊக்குவித்தார்.
“பேராயருக்கு தேவாலய விவகாரங்களில் முடிவெடுக்க அதிகாரம் உண்டு, உண்மைதான். ஆனால், அதைக் கொண்டு அவர் குறிப்பிட்ட அரசியல் நோக்கங்களுக்கு ஆதரவளிப்பதை ஊக்குவிப்பது முறையல்ல”, என்றாரவர்.
இதற்கு முன்னர் பள்ளிவாசல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்போதும் அவர்கள் தயார் தான்! நல்ல நோக்கம் என்றால் அதைச் சொல்ல ஏன் தயங்க வேண்டும்?
பெர்சே பேரணி அரசியல் சார்ந்ததல்ல ! அரசு நிர்வாகத்தில் , ஆளும்
அரசாங்கத்தின் கொள்கைகைகளில் காணப்படும் குறைபாடுகளை
வெளிப்படையாக எடுத்துரைக்கும் செயல்பாடுதான் இந்த பேரணி!
இதற்கு சமய சாயம் பூசக்கூடாது !
நமது நாட்டிற்குள் படையெடுத்திருக்கும் பாகிஸ்தானிகளும் பங்களாதேசிகளும் ….வாசலில் தீவிரவாத மதபோதனை போதித்து பிறகு வெள்ளிக்கிழமை …. நேரத்தில் வெடிவைத்து ….சலை தகர்க்கும் சம்பவம் நிகழும் காலம் வெகு தொலைவில் இல்லை.
அப்போதுதான் உங்கள் அறிவுரை அரசாங்கத்திற்கு தேவைப்படும் கெராக்கான் இளைஞர்களே அதுவரை பொறுமையாக இருங்கள்.
மலாய்/முஸ்லிம்கள் அரசியலில் சமயத்தை கலக்க வில்லையா? ஏண்டா வெங்காயம் கெராக்கான் சப்பி சப்பி மழுங்கி விட்டீர்களா?