பாஸ் எம்பி ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயார்

mafuzபாஸ்   பொக்கோக்   சேனா   எம்பி   மாபுஸ்   ஒமார்,   சனிக்கிழமை  பெர்சே  5  பேரணியில்   கலந்துகொண்டதற்காகக்    கட்சி   என்ன   நடவடிக்கை   எடுத்தாலும்  அதை   எதிர்கொள்ள  ஆயத்தமாக  உள்ளார்.
பெர்சே    5  பேரணியில்   கலந்துகொண்ட   கட்சி   உறுப்பினர்களுக்கு   எதிராக   நடவடிக்கை   எடுக்கப்படும்   என   பாஸ்  கட்சித்   தலைவர்   அப்துல்  ஹாடி  ஆவாங்    அறிவித்ததை    அடுத்து   அவர்  இவ்வாறு  கூறினார்.

“நான்  தயாராக  இருக்கிறேன்.  நான்  செய்தது   குற்றமா  என்பதை  ஒழுங்கு   நடவடிக்கைக்  குழுதான்   தீர்மானிக்க    வேண்டும்.

“மலேசியர்களுக்காகத்தான்   அதைச்  செய்தேன்.  பெர்சே   பொதுமக்களுக்கு   மிரட்டல்    என்று   நான்  நினைக்கவில்லை”,  என  மாபுஸ்  செய்தியாளர்களிடம்   தெரிவித்தார்.