பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் சிறைவாசத்தில் உள்ள அன்வார் இப்ராகிமுடன் மீண்டும் நட்பு கொண்டிருப்பதை எண்ணி வெட்கப்படுகிறாராம்.
அதனால்தான் இப்ராகிம் அலி, மகாதிரின் கட்சியான பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா( பெர்சத்து)வில் சேரவில்லையாம். முன்னாள் தகவல் அமைச்சர் சைனுடின் இப்ராகிம் அவரது வலைப்பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.
“ஏன் பெர்சத்துவில் சேரவில்லை என்பதை இப்ராகிம் என்னிடம் தெரிவித்தார். மகாதிர் டிஏபியுடன் நட்பு பாராட்டுவது அதற்குக் காரணமல்ல. முன்பு அவரைக் கவிழ்ப்பதற்கு முயன்ற அன்வார் இப்ராகிமுடன் மீண்டும் அவர் நட்பு கொண்டிருக்கிறாரே அதுதான் காரணமாம்”, என்று சைனுடின் கூறினார்.
நேற்று செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய மகாதிர், பெர்சத்து டிஏபியுடன் தொடர்பு கொண்டிருப்பதற்காக அதில் சேர மறுக்கும் இப்ராகிம் அலியை நண்பர் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுவதாக கூறியிருந்தார்.
Ibrahim Aliyai ninaithaal siripu Taan varuthu.
அரசியலில் நடிப்பு மாறும்.தவளை தண்ணி கண்ட இடத்தில் விசுவாசமாக இருக்க்கும்.பணப் பைத்தியங்கள்!
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா !! 🙂