தம் தொகுதியில் நாச வேலைகள் பெருகிவிட்டதாக சட்டமன்ற உறுப்பினர் முறையீடு

constituபினாங்கு   கெபுன்   பூங்கா   தொகுதி்   சட்டமன்ற  உறுப்பினர்   அவரது    தொகுதியில்    “தீ  வைப்போர்,  நாச  வேலை  செய்வோர்,  அரசியல்  எதிரிகள்  பெருகிவிட்டனர்”   என்கிறார்.

அத்தீய   சக்திகள்   2013இலிருந்து   அத்தொகுதியில்    தாம்   செய்து  வரும்  நற்பணிகளைக்  கெடுக்கும்  முயற்சியில்   ஈடுபட்டு  வருவதாக   சியா   கா  பெங் (பிகேஆர்-  கெபுன்  பூங்கா) சந்தேகிக்கிறார்.

அவர்கள்   யார்   என்பது   ஓரளவுக்குத்    தெரிந்தாலும்   அவர்களின்  அடையாளத்தைத்   தெரிவிக்க    அவர்   விரும்பவில்லை.  ஆனால்,  அவர்கள்   அவரது  “கவனப்பட்டியலில்”  உள்ளனர்.

ஆகக்  கடைசியாக    ஆயர்  ஈத்தாம்  ரைபல்  ரேஞ்ச்   அடுக்ககத்தில்   நிகழ்ந்த  ஒரு    சம்பவத்தில்,     மூன்று    மின்தூக்கிகளுக்கு   தீ  வைக்கப்பட்டு  அவை  செயலிழந்து  கிடக்கின்றன.

“இங்கு  வசிக்கும்  பலர்   மூத்த  குடிமக்கள்,  உடலுறுப்புக்  குறையுடையோர்,  விளிம்புநிலை  மக்கள்”,  என  சியா   கூறினார்.

“இப்போது   அவர்கள்   16மாடிகள்   நடந்து  செல்ல   வேண்டிய  நிலை   ஏற்பட்டுள்ளது”,   என   மாநிலச்  சட்டமன்றக்  கட்டிடத்தில்   மலேசியாகினியிடம்   அவர்   தெரிவித்தார்.

“தீ   வைக்கப்பட்டதால்   மின்தூக்கிகள்   பயனற்றுப்  போய்விட்டன;  அதைச்  செய்தது   யார்  என்பது   தெரியவில்லை.

“என்னைக்  கீழறுக்க    நினைத்தால்   என்னிடம்   வாருங்கள்,  அப்பாவி   குடியிறுப்பாளர்களுக்கு   எதிராக    செயல்படாதீர்கள்”,  என்றாரவர்.