பிற்பகல் 2 மணிக்குள் சரணடைவீர்: தாஜுடின் ஆதரவாளர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

riotநேற்று   நாடாளுமன்ற வளாகத்தில்  கலகம்   செய்த    பாசிர் சாலாக்  எம்பி  தாஜுடின்   அப்துல்    ரஹ்மானின்    10  ஆதரவாளர்களும்   இன்று   பகல்    2 மணிக்குள் போலீசிடம் சரணடையுமாறு போலீஸ்   எச்சரித்துள்ளது.

தவறினால்    அவர்கள்  கைது   செய்யப்படுவார்கள்   என  போலீஸ்   படைத் தலைவர்   காலிட் அபு பக்கார்   கூறினார்.

“அவர்கள்   யார் என்பதும்  எங்கே இருக்கிறார்கள் என்பதும் எங்களுக்கு தெரியும்”,  என  புக்கிட்   அமானில்     செய்தியாளர்  கூட்டமொன்றில்   காலிட்    தெரிவித்தார்.