நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் சண்டையை மூட்டியது சம்பந்தமாக மேல்விபரம் பெறுவதற்காக போலீசார் 11 பேர்களை கைது செய்துள்ளனர்.
28 க்கும் 54 வயதிற்கும் இடையிலான அவர்களில் மூவர் பெண்களும் எண்மர் ஆண்களுமாவர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் அமர் சிங் தெரிவித்தார்.
அவர்கள் தண்டணைச் சட்டம் தொகுப்பு செக்சன் 147 இன் கீழ் கலகம் செய்ததற்காக விசாரிக்கப்படுவர் என்று அவர் மேலும் கூறினார்.
நாடாளுமன்றத்திற்கு அக்கலகக்காரர்களை கொண்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து போலீஸ் முடிவெடுக்கும், அது அந்த எம்பி கொண்டிருந்த நோக்கங்களைப் பொறுத்திருக்கும் என்று புக்கிட் அமானில் முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கர் கூறினார்.
நேற்று துணை அமைச்சர் தாஜுடினின் ஆதரவாளர்கள் ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சாமாட்டை தாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டனர்.
தாம் அக்கூட்டத்தினரை கொண்டு வரவில்லை என்று தஜுடின் கூறிக்கொண்டார்.