ஷியாரியா நீதிமன்ற(குற்றவியல்) சட்டம் 1965-இல் திருத்தம் செய்வதற்கு முஸ்லிம்- அல்லாதார் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தால் 1976ஆம் ஆண்டு சட்டச் சீரமைப்பு (திருமண, மணவிலக்கு)ச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர முஸ்லிம்களும் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என பாஸ் எம்பி ஒருவர் எச்சரித்துள்ளார்.
பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் முன்வைக்கும் தீர்மானத்தால் முஸ்லிம்- அல்லாதாருக்குப் பாதிப்பில்லை ஆனால், முஸ்லிம்- அல்லாதாருக்கான திருமணம், மணவிலக்கு, பிள்ளைகள் பராமரிப்புச் சட்டத்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்படலாம் என பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறினார்.
பாஸ் எப்போதுமே முஸ்லிம்- அல்லாதார் உரிமைகளுக்கு மதிப்பளித்து வந்துள்ளது என்பதை வலியுறுத்திய அவர், “இருவருமே நியாயமாக நடந்து கொள்வோம்” என்று குறிப்பிட்டார்.
“முஸ்லிம்களின் உரிமைகளைத் தொந்திரவு செய்யாதீர்கள். முஸ்லிம்களும் முஸ்லிம்- அல்லாதாருக்குத் தொல்லை தர மாட்டார்கள்.
“அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் நாங்களும் சட்டச் சீரமைப்பு (திருமண, மணவிலக்கு)ச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடியும்”, என கோட்டா பாரு எம்பி கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
சின்னப்புள்ள தனமா இருக்கு.
இவன் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுகிறான்.தான் ஒரு மத தீவிரவாதி என்பதை இதன் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறான்.இவன் பாணியில் முஸ்லீம் அல்லாதவன் பேசியிருந்தால் இந்நேரம் “SOSMA ” பாய்ந்திருக்கும்.
போடா ….PAS…. ஆசிரியரே இதை அப்படியே போடுங்கள் உங்களுக்கு நன்றி பொறுத்தது போதும் வெள்ளம் தலைக்கு மேல் வரும்போது அணை PODDE ஆகணும்
பாஸ் கட்சியின் இந்த கருத்து அவர்களின் உண்மையான நிலைபாட்ட காட்டுகிறது. அவர்களுக்கு இஸ்லாத்தை பயன்படுத்தி மற்ற மதத்தவரிகளின் குடும்பத்தில் குந்தகம் விளைவிப்பது ஒரு குற்றமாகவே கருதவில்லை. ஆகவே அவர்களின் இழிவான எண்ணத்தை வாசிக்கவும் (பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் முன்வைக்கும் தீர்மானத்தால் முஸ்லிம்- அல்லாதாருக்குப் பாதிப்பில்லை ஆனால், முஸ்லிம்- அல்லாதாருக்கான திருமணம், மணவிலக்கு, பிள்ளைகள் பராமரிப்புச் சட்டத்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்படலாம் என பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறினார்.) எனது நிலைபாட்டினை இந்த கட்டுரை நன்றாக விளக்கியுள்ளது. ( Shariah laws already affect non-Muslims, SIS says -: http://www.themalaymailonline.com/malaysia/article/shariah-laws-already-affect-non-muslims-sis-says?utm_source=dlvr.it&utm_medium=facebook#sthash.0dQKcUce.sD2Zv7fp.dpuf
ஆகவே மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம் (Malaysian Consultative Council of Buddhism, Christianity, Hinduism, Sikhism and Taoism (MCCBCHST) ) மற்றும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து ஒரு நல்ல தீர்வை வழங்க வேண்டும்.
இந்த கம்மன்னாட்டிகளுக்கு முஸ்லீம் அல்லாதார் எப்படி நியாயமாக நடக்கவேண்டும்? இந்த இனங்கள் சொல்வதற்கு எல்லாம் தலை ஆட்டிக்கொண்டிருக்க வேண்டுமா? இப்படி சொல்லியா சுதந்திரம் கிடைத்தது? இவன்கள் என்ன நியாயமாகவா நடக்கிறான்கள்?
முஸ்லிமோ முஸ்லிமல்லாதாரோ அது முக்கியமில்லை. அடிப்படை மனித உரிமை மதிக்கப்பட வேண்டும்.
வணக்கம் இன்று மதமாற்றத்தால் எங்களுக்கு இருக்கும் பிரச்சனை உங்களால் வந்த பிரச்சனை தானே.
முஸ்லீம் அல்லாதாரர்க்கு பாதிப்பு ஏற்படுமென்றால் நிச்சயமாக அது எதிர்க்கப்பட வேண்டும்.இந்த விவகாரத்தில் முஸ்லிம்களும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால்…….
அந்த சமயத்தில் மனித உரிமை என்பதே கிடையாது ஐயா– தயவு செய்து சிறிது கவனிக்கவும். இதற்கு மேல் நான் என்ன சொல்ல?
இந்த பாஸ் கட்சி மட்டிகள் எல்லாம் மூளையை கால் முட்டியில் வெச்சுருக்கானுங்க… போன எலெக்ஷனிலே நாம தேவை பட்டோம்..இப்ப புத்திய காட்ட ஆரம்பிச்சுடாங்கள்… இவங்களை எல்லாம் கொதிக்கிற எண்ணெய்ல போடணும்..கம்மனாட்டிங்க..
மதத்தை முன்னிறுத்தி ஆண்ட நாடெல்லாம் மண்ணாய் போகிற காட்சியை கண்டுமா திருந்தவில்லை . ஈரான் , ஈராக் , ஆப்கன் , பாக்கிஸ்தான் நாடுகளில் என்ன நடக்கிறது ? அதேதான் இங்கையும் நாடாகும். மதத்தை முன் நிறுத்தாதே . அரசியல் முதிர்ச்சியை முன்னிறுத்துங்க …….. ஐயா…… ஐயா!
ஐயா malaian அவர்களே– நாம் என்ன கூறி தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டாலும் இந்த மதவெறி இனவெறி பிடித்த ஈனங்களுக்குக்கு அதைப்பற்றி அக்கறை கிடையாது– உங்களுக்கு தெரியுமா இவன்களின் தத்துவம்– ஒரு நல்ல அம்மதத்தை சாராதவன் இவன்களால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டான்–ஆனால் இவன்களைப்போல் நாதாரிகளை அரவணைத்து ஏற்று கொள்ளப்படுவான்கள்- பகுத்தறிவுக்கும் இவர்களுக்கும் வெகுதொலைவு.
“ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகாது
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகாது”
என்பதற்கு ஏற்ப மலேசிய அரசியலில் அரசியலையும் மதத்தையும் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றோடு ஒன்றாக இணைத்து அரசியல் புரியும் திருந்தாத ஜென்மங்கள் கொண்ட கட்சிகள் என்றால் “அம்னோபாஸ்”-தான்.
“அம்னோபாஸ்” பெயர் அருமை.
ஆனால் UMNOBOSS – UMNOPAS
இதில் எது சரி ஸ்ரீகர முதல்வனே !