அம்னோ தோல்வி கண்டால் மலாய்க்காரர்கள் அவர்களின் கெளரவத்தையும் இறையாண்மையையும் இழப்பார்கள் என்று அக்கட்சியின் நிர்வாகச் செயலாளர் அப் ரவுப் யூசோ கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“இந்நாட்டில் மலாய்க்காரர்கள்தாம் பெரும்பான்மை என்றாலும் அரசியல் அதிகாரத்தைப் பொருத்தவரை மலாய்க்காரர்கள் சிறுபான்மையினராக ஆகிவிடும் அளவுக்கு மலாய் அரசியல் வலிமை பிரிந்து கிடக்கிறது; பலர் இதை உணர்வதில்லை”, என ரவுப் நேற்றிரவு புத்ரா வாணிக மையத்தில் ஒரு நிகழ்வில் கூறியதாக அம்னோ ஆன்லைன் குறிப்பிட்டுள்ளது.