இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார், வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதி பெறும் விசயத்தில் அனைத்துத் தரப்புகளுக்கும் கவனம் தேவை என எச்சரித்துள்ளார்.
பெர்சேயும் மகளிர் அமைப்பான எம்பவரும் கோடீஸ்வரர் சோரோஸின் ஓபன் சொசைடி அறநிறுவன(ஓஎஸ்எப்)த்திடமிருந்து நிதி பெற்றதன் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதை போலீஸ் தலைவர் சுட்டிக்காட்டினார்.
“நாட்டின்மீது பற்று கொண்டுள்ள குடிமக்கள் என்ற முறையில் நாம் யாருடன் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளோம் என்பதைக் கவனிக்க வேண்டும். குறிப்பாக அன்னிய நிறுவனங்களிடம் கவனம் தேவை”, என போலீஸ் தலைவர் புக்கிட் அமானில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
“பல நாடுகள் ஓஎஸ்எப்-புடன் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. ரஷ்யாவைப் பாருங்கள். ரஷ்யா அதன் எல்லைக்குள் ஓஎஸ்எப் செயல்படுவதற்குத் தடை போட்டுள்ளது. ஏன்? ஏதாவது காரணம் இருக்கும்.
“நாம் என்ன செய்கிறோம், சந்தேகத்துக்குரிய தரப்புகளை அல்லது என்ஜிகளை வரவேற்கிறோம், நம்முடன் கைகோத்துப் பணியாற்றுவதற்கு”, என்றாரவர்.
அவற்றிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய காலிட், போலீஸ் வேறு சில என்ஜிகளின் நடவடிக்கைளையும் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
நமது பிரதமர் அவர்களையும் சேர்த்துதானே ????
டேய் வெங்காயம் -நம்பிக்கை நாயகனின் 2 .6 பில்லியன் என்ன பணம் இல்லையா?
அது நாட்டு பிரதமருக்கு வந்த நன்கொடை
வாய் திறந்தால் காலிட் கதை கந்தலோ.கந்தல்!
பிரதமருக்கு அன்னிய நிதியுதவி அளித்தவரும் ஓபன் சொசைடி அறநிறுவனத்துடன் (ஓஎஸ்எப்) தொடர்பு உள்ளவரா என்ற கோணத்திலும் விசாரணை தொடங்கலாமே !
ஏனென்றால் ஓபன் சொசைடி அறநிறுவனத்துடன் (ஓஎஸ்எப்) தொடர்பு உள்ளவர் என்பது நிரூபணம் ஆனால் பிரதமருக்குதானே அவப்பெயர்.