குத்தகை வழங்கிய விவகாரத்தில் நிகழ்ந்த ஊழல் தொடர்பில் டத்தோ பட்டம் பெற்ற அரசாங்க அதிகாரி ஒருவர் விசாரணைக்காக நான்கு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டார்.
நேற்று பிற்பகல் மணி 2க்கு அவரைக் கைது செய்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அவரது வங்கிக் கணக்கையும் முடக்கி வைத்தது. அவரது வங்கி கணக்கில் மில்லியன் கணக்கில் பணம் இருப்பதாக தெரிகிறது.
மலாக்கா ஆயர் கெரோ மெஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அந்த அதிகாரியை விசாரணைக்காக நான்கு நாள் தடுத்து வைக்க மெஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
-பெர்னாமா