அம்னோ அதன் பொதுப் பேரவையில் மலாய்க்காரர்களையும் நாட்டையும் பாதிக்கும் விவகாரங்களை விவாதிக்கத் தவறிவிட்டது என்று அன்வார் இப்ராகிம் குறைகூறினார்.
“டிஏபியையும் டாக்டர் மகாதிர் முகம்மடையும் சாடுவது தீர்வாகாது”, என்றாரவர்.
நஜிப் அம்னோ தலைவர் என்ற முறையில் மலாய்க்காரர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலப் பகுதிகளும் மலாய்க்காரர் பங்குரிமையும் குறைந்திருப்பது குறித்து பேசியிருக்க வேண்டும்.
“மலாய்க்காரர் நலன் காப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. அது பற்றிப் பேசப்படவில்லை”, என்று அன்வார் குறிப்பிட்டார்.
விலைவாசி உயர்வு, பணவீக்கம், 1எம்டிபி விவகாரம் போன்றவை குறித்தும் பேசப்படவில்லை என்றாரவர்.
ஏண்டா அன்வரு எப்போதும் மலாய்க்காரன்களைத்தானே தூக்கி தூக்கி பேசுறான் கள் — மலேசியாயாவை பற்றியும் மற்ற மலேசியர்களை பற்றியும் தான் பேச்சு இல்லையே– மற்ற மலாய்க்காரன் அல்லாத மலேசியர்களை தாக்கியும் கேவலப்படுத்தியும் தானே சுகம் கண்டுகொண்டீர்கள்? மலேசியாயாவின் பொருளாதாரம் மலாய்க்காரனின் பொருளாதாரத்தின் அறிவு வெள்ளிடை மலை. ஒன்றுமே இல்லாத ஒரு சிறிய புள்ளி சிங்கப்பூர் இன்று முதலாம் உலகம்– ஆனாலும் இங்கிருக்கும் ஈனங்களுக்கு மட்டும் மீசையில் மண் ஒட்டவில்லை–வறட்டு பேச்சுக்கு மட்டும் குறைவில்லை.