கேலிச் சித்திர ஓவியர் ஸுனார், தனக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை இரத்துச் செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறார்.
சுல்கிப்ளி அன்வார் அல்-ஹாக் என்னும் இயற் பெயரைக் கொண்ட ஸுனார் இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தார்.
“சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் என்னை ஒரு கருத்தரங்குக்கு அழைத்துள்ளது. ஆனால், குடிநுழைவுத் துறை என் பெயர் கருப்புப் பட்டியலில் உள்ளதாக தெரிவித்தது.
“இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீசின் உத்தரவுதான் அதற்குக் காரணமாம். மேல் விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை”, என்று அவர் நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம்
கூறினார்.
zunar — உன்னைப்போல் பெரும்பான்மை மலாய்க்காரர்கள் இருந்தால் இந்த நாடு எப்போதோ முன்னேறியிருக்கும்– அம்னோ நாதாரிகள் நாட்டை சூறை ஆடிக்கொண்டிருப்பதை பெரும்பான்மை மலாய்க்காரன்கள் ஆதரிப்பதே இன்றைய இந்த நாட்டின் சாபக்கேடு.