கடந்த ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற எக்ஸ்போ மிலானோவில் மலேசிய காட்சிக்கூடத்திலிருந்து பிரதமர் நஜிப் ரசாக்கின் படம் அகற்றப்பட்டது என்று கூறப்படுவதை அனைத்துலைக வாணிப மற்றும் தொழில் அமைச்சும் மலேசிய வெளிநாடு வாணிக மேம்பாட்டு கோர்புரேசனும் (மாடிரேட்) மறுத்துள்ளன.
இன்று அமைச்சும் மாடிரேட்டும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் பிரதமரின் படம் அகற்றப்பட்டதாக முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் சமீபத்தில் ஓன்லைன் வீடியோ பதிவில் கூறிக் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டு, அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தன.
அந்த எக்ஸ்போவை நடத்திய அதிகாரிகளின் தொழிலியம் மற்றும் ஆற்றல் ஆகியவற்றை கீழறுப்புச் செய்யும் முயற்சிகள் குறித்து வருந்துவாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.