பூமிபுத்ராக்களின் சிறப்புச் சலுகைகள் பற்றி விவரிக்கும் அரசமைப்பின் 153ஆவது சட்டப் பிரிவு குறித்து கெராக்கான் கட்சியின் எண்டி யோங் கேள்வி எழுப்புவது இனங்களுக்கிடையில் பதற்றத்தை உண்டுபண்ணி விடலாம் என செராஸ் அம்னோ தலைவர் சைட் அலி அல்ஹப்ஷி எச்சரித்தார்.
“அது ஆபத்தான பேச்சு, தேசநிந்தனை செய்வது போலவும் தோன்றும் அது மலாய்க்காரர்களுக்கும் மலாய்க்காரர்- அல்லாதாருக்குமிடையில் பதற்றநிலை உருவாகக் காரணமாக அமைந்து விடலாம்”, என்றாரவர்.
அது, மலாய்க்காரர் மற்றும் முஸ்லிம்களின் நலன் காக்கப் போராடிவரும் அம்னோவுக்கு விடுக்கப்பட்ட “சவால்” போலவும் தோன்றுவதாக சைட் அலி கூறினார்.
முன்னதாக நேற்று, கெராக்கான் இளைஞர் துணைத் தலைவர் யோங் நாட்டில் சமூகம், கல்வி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் பல்லினங்களுக்கும் நியாயமாக நடந்துகொள்ளும் வகையில் அரசமைப்பின் 153ஆவது சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்வதற்கு இது ஏற்ற தருணமாக இருக்கலாம் என்ற ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.
சயிட் அழியா முகமட் அலியா?
உம்னோ ஆட்சியில் தொடர்த்தால் இப்படித்தான் . போங்கடா உங்க மண்ணைக்கட்டி ஆட்சி /
இவன்கள் ஆரம்பித்ததே இந்த இன பாகுபாடு-இன வெறி-பிரித்தாளும் முறை-ஒரு இனத்திற்கு இன்னொரு இனத்தை எதிராக்கியதே இந்த கம்மனாட்டிகள் ஆனால் பழியை மற்றவர்கள் மேல் போடுவது– இதுதான் அந்த நாளில் இருந்து நடக்கிறதே. நம்மை எல்லாம் மடையர்கள் என்று இன்னும் நினைத்து காலம் கடத்தும் ஈனம்.
சொந்த நாட்டு மக்களையே அந்நியர்கள் போல் நடத்தும் இவர்கள் சைத்தான் வம்சாவளிகள். இதில் என்ன வொரு வேடிக்கை என்றால் இவர்களே வந்து குடியேறியர்கள் தான்.