“ஷாரிஸாட் அவர்களே, உங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக நீங்கள் முடிவு எடுக்கக் கூடாது. நீங்கள் பொது மக்களுடைய பிரதிநிதி. அது போன்று நடந்து கொள்ளுங்கள்.”
ஷாரிஸாட்: என் குடும்பத்தை தாக்க வேண்டிய அவசியமில்லை
டாக்டர் ஜேக்கப் ஜார்ஜ்: அரசாங்க நிதிகள் பயன்படுத்தப்படும் போது இயக்குநர்கள் குழு ஒன்றுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம் தனது சகோதர நிறுவனத்துக்கு (அதுவும் அவர்களுக்கு சொந்தமானது) கழிவுகளையும் கடன்களையும் வழங்குவதில் சுய நலன் சம்பந்தப்பட்டுள்ளதா அல்லது 1955ம் ஆண்டுக்கான நிறுவனச் சட்டம் மீறப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
அதற்கு இடையில் அந்தத் திட்டத்தைப் பெறுவதற்கு அவருடைய குடும்பம் எப்படித் தகுதி பெற்றது என்பதை மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் விளக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் உருவாக்கிய சர்ச்சை என இதனை திசை திருப்ப வேண்டாம். மலேசிய வாக்காளர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். அவர்கள் முட்டாள்கள் அல்ல.
ஜெரார்ட் சாமுவேல் விஜயன்: அந்தத் திட்டத்துக்கு திறந்த டெண்டர் நடைமுறை பின்பற்றப்பட்டதா? உங்கள் தொடர்பு உட்பட தனது நலன்களை அவரது குடும்பம் டெண்டர் குழுவிடம் தெரிவித்ததா?
விவசாய, விவசாயத் தொழில் அமைச்சர் நோ ஒமார் அல்லது ஷாரிஸாட் தலையீடு இல்லாமல் முடிவு செய்யப்பட்டது என்பதை டெண்டர் குழு உறுதி செய்ய முடியுமா?
ஆகவே இத்தகைய ஊழல் இப்போது ‘ஹலால்’ ஆகி விட்டதா? அந்தத் திட்டம் இல்லாவிட்டால் ஷாரிஸாட் குடும்பம் உயிர் வாழ முடியாத அளவுக்கு பரம ஏழையா?
பல்லி: மக்கள் வரிப்பணத்தில் சமூக நல அமைச்சர் தமது சொந்த நலனைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.
இப்போது தெளிவாகிறது. தமது குடும்பம் கடுமையாக உழைப்பதாக சொல்வதற்கு அவருக்கு எப்படித் துணிச்சல் வந்தது? நாம் அனைவரும் கஷ்டப்பட்டு வேலை செய்யவில்லை என்பது அதன் பொருளா?
ஹலோ பின்வாசல் அமைச்சரே, நீங்கள் பொது ஊழியர், நாங்கள் வரி செலுத்துவோர். அதனால் உங்களைக் கேள்வி கேட்பதற்கு எங்களுக்கு உரிமை உண்டு.
அடையாளம் இல்லாதவன்_410a: நீண்ட காலம் மௌனமாக இருந்த ஷாரிஸாட் அந்தத் திட்டம் மீது எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு நல்ல விளக்கத்தைத் தருவார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். அவர் இந்தப் பதிலை சொல்லியிருக்கிறார். அதாவது தமது குடும்பம் கடுமையாக உழைப்பதாக!!
பலர் கடுமையாக உழைக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு 250 மில்லியன் ரிங்கிட் கடன் கிடைப்பது இல்லை. குறிப்பிட்ட திட்டம் தோல்வி அடைந்து விரும்பிய பயன்கள் கிடைக்காவிட்டால் எல்லா அமைச்சர்களும் ஏன் பிரதமரும் கூட காப்பாற்றுவதில்லை.
பொதுவான ஆளுமைக் கோட்பாடுகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. ஆகவே உங்கள் குடும்பம் கடுமையாக உழைக்கிறது என்பது சரியான பதில் அல்ல. நீங்களும் உங்கள் குடும்பமும் பொறுப்பேற்க வேண்டும். வேறு வழி இல்லை.
ஒஸ்கார் கிலோ: உங்கள் குடும்பம் அந்தப் பண்ணையில் உச்சி வெயிலில் அன்றாடம் கடுமையாக வேலை செய்கிறதா? அல்லது அம்னோ அரசியல்வாதிகளுக்கு ஐஸ் வைப்பதற்கு உழைக்கிறதா?
நியாயமானவன்: அமைச்சரது பதில் பொது மக்களுடைய ஆத்திரத்தையே அதிகரிக்கும். அந்தத் திட்டம் மீதான விவாதம் தொடங்கியதற்கு தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை காரணம் என்பதை அவர் மறந்து விட்டாரா?
பிராங்கோ: ஷாரிஸாட் அந்த திட்டத்துக்கு உங்கள் குடும்பம் கடுமையாக பாடுபட்டிருக்கலாம். ஆனால் மில்லியன் கணக்கான மலேசியர்கள் கடுமையாக உழைக்கின்றனர். வரியும் செலுத்துகின்றனர்.
உங்கள் குடும்பம் கடுமையாக வேலை செய்கிறதோ இல்லையோ அது பற்றி எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து செலுத்தும் வரிப்பணம் சில சேவகர்களுக்கும் அவர்களது குடும்பத்துக்கும் கொடுக்கப்படுகிறது. அவர்கள் அந்தப் பணத்தைப் பயன்படுத்தி அல்லது தவறாகப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். ஆனால் இங்கே நாங்கள் பானையைச் சுரண்டிக் கொண்டிருக்கிறோம்.
ஷாரிஸாட் அவர்களே, உங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக நீங்கள் முடிவு எடுக்கக் கூடாது. நீங்கள் பொது மக்களுடைய பிரதிநிதி. அது போன்று நடந்து கொள்ளுங்கள்.