ஷியாரியா நீதிமன்ற(குற்றவியல் நீதி)ச் சட்ட (சட்டம்355)த் திருத்தத்துக்கு ஆதரவாக நடத்தப்படும் பேரணியில் கலந்துகொள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் பாஸ் அழைக்கும்.
டிஏபிக்கும் அமனாவுக்கும்கூட அழைப்பு உண்டா என்று கேட்டதற்கு, “அனைவருக்கும் அழைப்பு உண்டு”, என பாஸ் தகவல் தலைவர் நஸ்ருடின் ஹசான் தெரிவித்தார்.
“பேரணியில் கலந்துகொண்டு சிறப்புச் செய்ய மலாய் ஆட்சியாளர்களையும் அழைப்போம்”, என்றாரவர்.
இன்று ஷா ஆலமில் செய்தியாளர்களிடம் பேசிய நஸ்ருடின் இன்று தொடங்கி அடுத்த வாரம் முழுக்க அழைப்பிதழ்கள் அனுப்பப்படும் என்றார்.
அம்னோ நாதாரிகள் நாட்டை நாற அடித்தது போதவில்லை –இந்த மதவெறி ஈனங்கள் அதை பலப்படுத்த செய்யும் அறிவிலித்தனம்.