1எம்டிபி விசாரணையில் ஆஸி போலீசாரும் சேர்ந்து கொண்டனர்

1mdbஆஸ்திரேலிய   கூட்டரசு   போலீஸ் (ஏஎப்பி)   1எம்டிபியுடன்  தொடர்புள்ள  பணம்   எதுவும்    தங்கள்    நாட்டுக்குள்   வந்துள்ளதா    என்று   புலனாய்வு   செய்து    வருகிறார்கள்.

அதன்   தொடர்பில்   ஆஸ்திரேலிய   குடிமகன்   அல்லது    அங்கு   வசிப்பவர்    எவரேனும்    சட்டமீறல்    செய்திருக்கிறாரா     அல்லது   அங்குள்ள   நிறுவனம்   எதுவும்    சட்டத்தை   மீறியுள்ளதா    என்று    ஏஎப்பி   ஆராய்ந்து    வருவதாக    த   ஆஸ்திரேலியன்     நாளேடு    தெரிவித்தது.

“ஏஎப்பி    அன்னிய     சட்ட   அமலாக்க    அதிகாரிகளுக்கு   உதவியாக    புலனாய்வு    செய்து    வருகிறது.  விவகாரம்   இன்னும்   விசாரணையில்   உள்ளதால்    அது   குறித்து    மேலும்   கருத்துரைப்பது   முறையல்ல”,  என   அந்நாளேட்டின்   பேச்சாளர்   ஒருவர்   கூறினார்.