தன் பராமரிப்பில் விடப்பட்டிருந்த மூன்று வயது சிறுவனை வீட்டில் தனியே விட்டுச் சென்ற பெண்ணுக்கு கோலா பிலா செஷன்ஸ் நீதிமன்றம் 10,000 ரிங்கிட் அபராதம் விதித்து 240 மணி நேரம் சமூகச் சேவை செய்யவும் உத்தரவிட்டது.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால் அப்பெண் ஓராண்டுச் சிறை தண்டனையை அனுபவிக்க நேரும்.
ஷம்சினார் அம்பியா என்னும் அப்பெண் கடந்த வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு தம்பின், கம்போங் பாரிட் பூலோவில் வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டில் அக்குற்றத்தைப் புரிந்தார்.
ஷம்சினார் அபராதத் தொகையைச் செலுத்த ஒப்புக்கொண்டார்.