லாட் என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் கேலிச்சித்திர ஓவியர் டத்தோ முகம்மட் நோர் காலிட் இன்று ஈப்போ பந்தாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இருதயப் பிரச்னை என்று தெரிகிறது.
லாட்,65, இன்று காலை அம்மருத்துவமனையின் தீவிர கவனிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக அவரின் இளவல், திரைப்பட இயக்குனர், மாமாட் காலிட் கூறினார்.
“அவரது உடல்நிலை நன்றாகவே உள்ளது”, என்றாரவர்.
லாட், கடந்த வாரம்கூட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக மாமாட் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை அவர் அங்கிருந்து வெளியேறினார்.