இன்றிரவு நடைபெறும் பெர்சத்து கட்சியின் அதிகாரப்பூர்வமான தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிகேஆர் உறுப்பினர்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளதாகவும் அதற்குப் பணம் கொடுக்கப்படும் என்று கூறப்படுவதை பிகேஆர் மறுத்துள்ளது.
இதை அறிவிக்கும் ஒரு போலிக் கடிதம் வலம் வந்து கொண்டிருக்கிறது. பிகேஆர் அலுவலகம் அவ்வாறான கடிதம் எதையும் வெளியிடவில்லை என்று பிகேஆரின் தொடர்புப் பிரிவு இயக்குனர் ஃபாமி பாட்ஸில் தெரிவித்தார்.