சட்டம் 355 கூட்டத்திற்கு பாஸ் தித்திவங்சா அரங்கத்தைப் பயன்படுத்தலாம், கு நான் கூறுகிறார்

 

usetitiwangsaஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் பரிபாலனம்) (திருத்தங்கள்) சட்டம் 1965 சம்பந்தப்பட்ட கூட்டத்திற்கு பாஸ் கட்சி கோலாலம்பூர் தித்திவங்சா அரங்கத்தைப் பயன்படுத்தலாம் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் கு நான் கூறியுள்ளார்..

யாராக இருந்தாலும் சரி, டாத்தாரான் மெர்தேக்காவை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். ரோஹின்யா முஸ்லிம் ஒற்றுமை ஒன்றுகூடுதல் கூட்டத்திற்கு செய்தது போல் தித்திவங்சா அரங்கத்தைப் பயன்படுத்துமாறு தாம் பாஸ் கட்சிக்கு ஆலோசனை தெரிவித்துள்ளதாக கு நான் கூறினார்.

இதற்கு முன்னதாக, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் சட்டம் 355 ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு ஆதரவு தெரிவிக்க பெப்ரவரி 18 இல் இக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.