ஜனவரி முதல் மக்கி அழியும் நெகிழிப் பைகள் அல்லது காகிதப் பைகளைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்று கூட்டரசு பிரதேச துணை அமைச்சர் லோக பாலன் மோகன் கூறினார்.
ஆனாலும், இன்னும் சில வணிகர்களும் வியாபாரிகளும் அந்த விதிமுறையைப் பின்பற்றவில்லை. அதனால் பாதகமில்லை, அந்த விதிமுறை செப்டம்பர் முதல் தேதிதான் முழுமையாக அமலுக்கு வருகிறது என்றாரவர்.
இப்போதைக்கு அந்த விதிமுறையைப் பயன்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்டுரைப்பதற்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
செப்டம்பரில் விதிமுறை முழுமையாக அமலுக்கு வரும்போது அதைப் பின்பற்றத் தவரும் வணிகளுக்கும் வியாபாரிகளுக்கும் ரிம2000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சு அறிவித்துள்ளது.
-பெர்னாமா
வலுக் கட்டாயமாக விதிக்கப்பட்ட. திணிக்கப்பட்ட ஒன்றை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்று கூட்டரசு பிரதேச துணை அமைச்சர் லோக பாலன் மோகன் கூறுவது அபாண்டமானது. இந்த நெகிழி பயன்பாட்டை அகற்று முன் அதற்கான மாற்றாக காகிதப் பைகளையோ கந்தப் பைகளையோ பயன்படுத்த ஊக்குவித்திருக்க வேண்டும். நெகிழிப்பைகள் தராத பட்சத்தில் மீன். முட்டை இறைச்சி, காய்களிகள் மற்றும் இதர மளிகைப் பொருட்களை நாங்கள் சட்டை மற்றும் சிலுவார் பாக்கெட்டுகளில் போட்டும் கொண்டுவர முடியுமா? அல்லது அல்லது போர்வைகளில் மூட்டை கட்டி கொண்டுவர முடியுமா? எந்த்ஹ விதியயும் அமல் படுத்து முன் அதற்கான மாற்று வழியை அறிமுகப்படுத்துவதே புத்திசாலித் தனம்.