சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள வழக்குரைஞர் முகம்மட் ஹனிப் கத்ரி அப்துல்லா, அவருக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீதான வழக்கை மீண்டும் விசாரணை செய்யும் துணிச்சல் உண்டா எனவும் சவால் விடுத்தார்.
சிங்கப்பூர் நீதிமன்றம், 1எம்டிபி மீதான வழக்கொன்றில் சுவீஸ் நாட்டு வங்கி அதிகாரி ஜென்ஸ் பிரெட் ஸ்டர்ஸெனக்கர் குற்றவாளி என்று தீர்ப்பளித்திருப்பதை அடுத்து ஹனிப் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
சிங்கப்பூர் வழக்கில் வெளிப்பட்ட உண்மை, பிரதமரின் வங்கிக் கணக்கில் போடப்பட்டிருந்த ரிம2.6 பில்லியன் தொடர்பில் நஜிப் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று அப்பாண்டி கடந்த ஆண்டில் அறிவித்திருந்ததற்கு முரணாக உள்ளது என்று ஹனிப் கூறினார்.
“நஜிப்பின் கணக்கில் இருந்தது அராபியாவிலிருந்து வந்த நன்கொடை என்பதால் சட்டத்துறை அலுவலகம் அவர்மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாக 2016 ஜனவரி 26-ல் அபாண்டி வெளியிட்ட அறிக்கையில் உண்மையில்லை என்பதை சிங்கப்பூர் நீதிமன்றத் தீர்ப்பு நிறுவியுள்ளது”, என ஹனிப் கூறினார்.
ஸ்டர்ஸெனக்கர், கடந்த புதன்கிழமை, 1எம்டிபி சம்பந்தப்பட்ட உண்மைகளைத் தாம் மறைத்ததை சிங்கை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். அக்குற்றத்துக்காக அவருக்கு 28-வாரச் சிறையும் எஸ்$ 128,000 அபராதமும் தண்டனையாக விதிக்கப்பட்டது.
அதெல்லாம் ஒன்றும் நடக்காது.அந்தப்பண்டிக்கு கழிவுக்கூடம் தான் தெரியும்.