துருக்கி ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று கிரிகிஸ்தானின் மானாஸ் விமான நிலையத்துக்கு அருகில் விழுந்து நொறுங்கியதில் குறைந்தது 32 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலியானவர்களில் பெரும்பாலோர் அது விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
அவ்விமானம் ஹாங்காங்கிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல்லுக்குச் செல்லும் வழியில் மானாஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிச் செல்வதாக இருந்தது. தரை இறங்க முயன்றபோது மோசமான வானிலை காரணமாக அது விழுந்து நொறுங்கியது.
-reuters