டிசம்பர் 16-இல் தொடங்கிய சுங்கை பூலோவுக்கும் செமாந்தானுக்குமிடையிலான எம்ஆர்டி முதல் கட்டச் சேவையில் நேற்றுவரை பயணம் செய்தவர் எண்னிக்கை சுமார் 1.2 மில்லியன்.
எம்ஆர்டியை அறிமுகப்படுத்தும் வகையில் டிசம்பர் 16-லிருந்து ஒரு மாதத்துக்குப் பயணிகள் எம்ஆர்டி-இல் இலவசப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அந்த இலவசப் பயணத் திட்டம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
இலவசப் பயணக் காலத்தில் ஒவ்வொரு நாளும் 27,000-இலிருந்து 30,000 பயணிகள் எம்ஆர்டி-இல் பயணம் செய்ததாக சுங்கை பூலோ- காஜாங் இரயில் சேவையின் தலைமை நடவடிக்கை அதிகாரி முகம்மட் இசோம் அசிஸ் கூறினார்.