எந்தவொரு கட்சியும் அது போடும் தாளத்துக்குத்தான் ஆட வேண்டும் என்று பக்கத்தான் ஹராபானைக் கட்டாயப்படுத்த முடியாது என பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறினார்.
“(முன்னாள் அமஎரிக்க அதிபர் பராக்) ஒபாமா ஒரு தடவை கூறினார், ஜனநாயகத்தில் சத்தம் அதிகமிருக்கும், சிலர் ஒத்துப் போவார்கள் சிலர் மாட்டார்கள், அதுதான் ஜனநாயகம் என்றார்.
“ஆனால், என் வழியைத்தான் பின்ப்பற்ற வேண்டும் என்று உங்களை நான் கட்டாயப்படுத்தினால் அது எதேச்சாதிகாரம் ”, என்றாரவர்.
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், பாஸுடன் ஒத்துழைக்க விரும்பும் கட்சிகள் பாஸ் சொல்படி நடக்க வேண்டும் என்று கூறியிருப்பதற்கு அஸ்மின் அவ்வாறு எதிர்வினை ஆற்றினார்.