சட்டம் 355: அசிஸ் பக்ராவியின் கருத்துக்கு மசீச மறுப்பு

mcaமசீச,  1965,   ஷியாரியா  நீதிமன்ற (குற்றவியல்   நீதி)ச்  சட்டத்தில்   திருத்தம்   செய்யப்படுவதைத்தான்     எதிர்க்கிறதே    தவிர   நடப்பில்   உள்ள    சட்டத்தை   அல்ல.

எனவே,   அத்திருத்தங்களை   மசீச    தலைவர்    லியோங்   தியோங்   லாய்    எதிர்ப்பது    ஏன்   என்று    போக்குவரத்துத்   துணை    அமைச்சர்    அசிஸ்   கப்ராவி   கேள்வி   கேட்பது   முறையல்ல    என்று      மசீச   சமய   நல்லிணக்கப்   பிரிவுத்   தலைவர்   டி  லியான்   கெர்  இன்று   ஓர்    அறிக்கையில்    தெரிவித்தார்.
“இச்சட்டம்   நடப்பில்   இருக்கும்  ஒன்று.  மசீச   இதற்கு   ஏற்கனவே   ஆதரவு  தந்து   வந்துள்ளது”  என்பதால்   இப்போது   சட்டம்   355-க்கு   மசீச    எதிர்ப்பு     தெரிவிப்பது   ஏன்   அசிஸ்   அண்மையில்   வினவியதாகக்  கூறப்பட்டிருந்தது.

அசிஸ்   சட்டம்   அறிந்தவராக  பேச   வேண்டுமே   தவிர   சாமானியர்போல்   பேசக்  கூடாது    என்று   டி    சாடினார்.

இஸ்லாம்   நாட்டின்   அதிகாரப்பூர்வ   சமயம்    என்பதை    மசீச  மதிக்கிறது  என்று  கூறிய    டி,   சட்டம்   355க்குக்  கொண்டுவரப்படும்   திருத்தங்களைத்தான்   அது   எதிர்க்கிறது ,    ஏனென்றால்   அது   கூட்டரசு   அரசமைப்பின்   அதிகாரத்தை   மீறுகிறது       என்றார்.

“ஒரே   குற்றத்துக்கு   இரண்டுவகை    சட்ட   முறைகளும்   இரண்டு  வகை   தண்டனைகளும்   இருப்பதைத்தான்   மசீச    எதிர்க்கிறது”,  என்றாரவ