பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் டாக்டர் மகாதிரை ஏற்றுக்கொள்ள பாஸ் கட்சி தயார். ஆனால், கடந்த காலத்தில் அவர் பாஸ் கட்சிக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு வருத்தப்பட வேண்டும், தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். மேலும், டிஎபியுடனான தொடர்புகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும்.
பாஸ் கட்சியின் ஆய்வு இயக்குனர் முகமட் ஸூடி மார்ஸுகி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
இஸ்லாமிய கட்சிக்கு 1977 இல் பெரும் தீங்கிழைத்தவர்களில் மிகப் பெரிய பொறுப்புடையவர் மகாதிர். ஆனால், அந்த முன்னாள் பிரதமருக்கு பாவத்திலிருந்து விடுதலை அளிப்பது இன்னும் சாத்தியம் என்று தாம் நம்புவதாக முகமட் ஸூடி கூறுகிறார்.
கடந்த காலத்தில் செய்த தவறுகளைத் திருத்திக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் எவரையும் மன்னிக்க பாஸ் தயாராக இருக்கிறது என்றாரவர்.
செய்த தவறுகளுக்காக வருத்தம் தெரிவிக்கிற மகாதிரை ஏற்றுக்கொள்ள பாஸ் தயாராக இருக்கையில், டிஎபிக்கு பாவத்திலிருந்து விடுதலை இல்லை என்ற பாஸ் கட்சியின் நிலைப்பாட்டை முகமட் ஸுடி மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.
யானை குழியில் விழுந்து விட்டால், அற்ப சின்ன தவளை கூட யானயை எட்டி உதைகுமாம் ; அதுபோல்தான் உள்ளது அந்த இசுலாமிய கடசியின் அறை கூவல்!!!
ஆமாம்டா உன்னைப்போல் நாதாரிகளுடன் சேர்ந்தால் நன்றாக கொள்ளை அடிக்கலாம்