சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் யூனுஸ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தேவான் ஸ்ரீ பெர்னாம் துயர்த்துடைப்பு மையத்தில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள் தம்முடைய ஓய்வுத்தலத்தில் இலவசமாக வந்து தங்கிக் கொள்ள இடம் ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிஞ்சான் மீனவர் கிராம தங்குவிடுதி மற்றும் ஓய்வுத்தலத்தில் தங்குவதற்கு அறையும் உணவும் வழங்கப்படும் என்றாரவர்.
“பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோரை நான் அறிவேன். அவர்கள் சுங்கை புசார் நாடாளுமன்றத்தைச் சேர்ந்தவர்கள். குறைந்த வருமானம் பெறுவோர்.
ஓய்வுத்தலத்தில் தங்குவதற்காக செய்யப்பட்டிருந்த முன்பதிவுகள் எல்லாம் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக ஜமால் கூறினார்.
பாதிக்கப்பட்டோருக்கு, அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு உதவியாக ரிம200 ரொக்கம் கொடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
-பெர்னாமா
இப்படி பட்ட நற்செயல்கள்தான் உங்கள் மதிப்பை மக்களிடம் உயர்த்தும் ஜமால் யுனூஸ் !!! வாழ்த்துக்கள்
கடந்த 26/1/2017 ஏற்பட்த வெல்லதுக்கு நஷ்டஈட்டு தருகிறார்கள்ள கிள்ளான் வட்டாரம் .