“புதிய மலேசியா’ உருவாக்கப்படுவதற்கான முயற்சியில் மலேசியர்கள் தளர்ச்சியடைந்து விடக்கூடாது என்று எதிரணித் தலைவர் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் மலேசிய மக்களை கேட்டுக்கொண்டார்.
வீட்டுச்சேவல் உறுதியுடைமை மற்றும் புதிய விடியலின் வருகையைத் தெரிவிக்கும் அடையாளம் என்று பிகேஆர் தலைவர் அவரது சீனப்புத்தாண்டுச் செய்தில் கூறினார்.
2017 ஆம் ஆண்டு சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும். அவற்றை வெற்றி கொள்ள அதிகமாகச் செய்ய வேண்டியிருக்கும்.
ஆனால், வரும் சவால்கள் எதுவாக இருந்தாலும், மனம் தளர வேண்டாம். சவால்களை எதிர்கொள்ளும் வலிமை பெற்றிருக்க வேண்டும் என்றாரவர்.
நாட்டின் தற்போதைய நிலைமையில் முன்னேற்றம் காண்பதற்கும் நியாயமான மற்றும் செல்வச் செழிப்பு மிக்க ஒரு புதிய மலேசியாவை உருவாக்குவதற்கான இந்த நீண்ட போராட்டத்திற்கு நமது விடாமுயற்சி தேவைப்படுகிறது என்று வான் அஸிசா மேலும் கூறினார்.