பயணத்தடை பட்டியலில் மலேசியா இல்லை, அமெரிக்கத் தூதரகம் விளக்கம்

embassyஅதிபர்   டோனல்ட்  டிரம்ப்   அமெரிக்காவுக்குள்   நுழையத்   தடை  விதித்த    நாடுகளில்   மலேசியா  ஒன்றல்ல    எனக்  கோலாலும்பூரில்    அமெரிக்கத்   தூதரகம்   இன்று    உறுதிப்படுத்தியது.

“கடந்த   வாரம்     அதிபர்    வெளியிட்ட    பயணத்தடை   ஆணையால்   பாதிக்கப்பட்ட    நாடுகளின்  பட்டியலில்    மலேசியா   இல்லை.

“மலேசியர்கள்   விசா   பெற்று   அமெரிக்காவுக்குத்   தொடர்ந்து   பயணம்     செய்து   வரலாம் ”,  எனத்   தூதரக    பேச்சாளர்   ஒருவர்   இன்று  மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.

டிரம்பின்   பயணத்தடை   பட்டியலில்    மலேசியாவும்   இடம்பெற்றிருப்பதாக   இணையத்  தளம்   ஒன்று   வெளியிட்டிருந்த   செய்திக்குத்   தூதரகம்    இவ்வாறு  எதிர்வினை     ஆற்றியது.

அச்செய்தியை   வெளியிட்டிருந்த  இணையத்   தளம்   இப்போது   அதை   மீட்டுக்கொண்டிருக்கிறது.